Share

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் பரிசு வழங்கினார்

ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் சதீஷ் சிவலிங்கம் ஆண்கள் பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றார். இதனையடுத்து சரத்கமல், சத்தியன், தீபிகா பல்லிகல், சவுரவ் கோஷல் உள்ளிட்ட தமிழக வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் வென்றனர்.

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் பரிசு வழங்குவதாக அறிவித்தார். இந்நிலையில் இன்று பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சம், டேபிள் டென்னிசில் பதக்கங்கள் வென்ற சரத்குமார், சத்தியன் ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி, ஸ்குவாசில் 2 வெள்ளி பதக்கங்கள் வென்ற தீபிகா பல்லிகலுக்கு ரூ.60 லட்சம், சவுரவ் கோசலுக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/n9hPN