Share

வதந்திகளை நம்பாதீர்கள்

காலா திரைப்படத்திற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் தடை என்று சில ஊடகங்கள் புரளியைக் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் அப்படி எந்தவொரு தடையும் விதிக்கப்படவில்லை.

நார்வே நாட்டில் ஒரு திரைப்படத்தை வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் அந்த நாட்டு அரசாங்கம் தடை விதிக்க முடியும். அல்லது திரையரங்க உரிமையாளர்கள் தடை விதிக்க முடியும்.

காலா திரைப்படத்தை வாங்கி விநியோகம் செய்யும் விநியோகஸ்தர் நினைத்தால் திரைப்படத்தை வெளியிடாமல் நிறுத்தலாமே தவிர, வேறு யாரும் தடை விதிக்க முடியாது.

யாரோ சில டுபாகூர்கள் காலா திரைப்படத்திற்கு தடை என்று கூறியதை நம்பி இங்கே சில ஊடகங்கள் அதனை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து ஐரோப்பாவில் காலா திரைப்படத்தை வெளியிடும் விநியோகஸ்தர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

தகவல் நன்றி. rajinifans.com

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/IvoQG