Share

காலா திரைப்படத்தை ஃபேஸ்புக்கில் ஒளிபரப்பிய நபர் சிங்கப்பூரில் கைது

காலா திரைப்படத்தின் ப்ரீமியர் காட்சி சிங்கப்பூரில் இன்று மாலை தொடங்கியது. அங்குள்ள கேத்தே திரையரங்கிலிருந்து படத்தினை ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த ப்ரவீன் என்ற நபரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தகவலை நடிகர் விஷால் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள ப்ரவீன் என்பவர் மன்னார்குடியைச் சேர்ந்தவர். தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/sReo6