Share

முதல் முறையாக வட கொரியா – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு

வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தென் கொரிய அதிபர் மூன் ஜேவை கடந்த ஏப்ரல் 27-ம் தேதி சந்தித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த சந்திப்பின் போது இரு நாடுகளும் அணு ஆயுதமற்ற நாடாக கொரியாவை மாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

முதலில் வட கொரிய அதிபர், தென் கொரிய தூதரக குழுவிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்க விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து இரு அதிபர்களும் சந்தித்து பேச தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதனையடுத்து சிங்கப்பூரில் இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவித்தனர். இந்நிலையில் நேற்று இரு நாட்டு அதிபர்களும் சிங்கப்பூர் வந்தடைந்தனர். இன்று வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/h8UNn