Share

காலா திரைப்பட வெற்றி சர்ச்சை – தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

சூப்பர் ஸ்டாரின் காலா திரைப்படம் நஷ்டமடைந்ததாக ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

”காலா திரைப்படம் எங்களுக்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறது. இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும், ஆதரவைக் கொடுத்த ரசிகர்களுக்கும் நன்றி” என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான வொண்டர்பார் நிறுவனம் ட்விட் வெளியிட்டிருக்கிறது.

பல திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் காலா படம் தங்களுக்கு வெற்றியைக் கொடுத்திருப்பதாகத் தொடர்ந்து தகவல் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/9RsWh