Share

ஏழை நாடு பட்டியலில் முதல் இடத்திலிருந்த இந்தியாவை பின்னுக்கு தள்ளியது நைஜீரியா

உலகில் அதிக அளவில் மிகவும் ஏழ்மையில் இருக்கும் மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலை ப்ரூகிங்ஸ் இன்ஸ்டிட்யூசன் என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. இந்த அமைப்பு வெளியிட்ட பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா இருந்து வந்துள்ளது. தற்பொழுது இந்த ஆண்டு மே மாதம் முதல், உலகில் அதிக அளவில் மிகவும் ஏழ்மையில் இருக்கும் மக்கள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்தியாவை பின்னுக்கு தள்ளி நைஜீரியா முதல் இடத்துக்கு வந்துள்ளது. மேலும், இந்தியாவில் 70.6 மில்லியன் மக்களும், நைஜீரியாவில் 87 மில்லியன் மக்களும் ஏழ்மையில் வசித்து வருவதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்தனர்.

Share
The short URL of the present article is: http://www.seythigal.in/cRezo